Thursday, January 30, 2014

மலைக்க வைக்கும் மலேசியா 3

                                                                    அனைத்து ஹோட்டல்களிலும் காலை 

உணவு சுயமாக பரி  மாறி கொள்ளும் வகையில் அமைக்கப்  பட்டுள்ளதால் 

சிலபல தள்ளு முள்ளுகளுக்கிடையே மேஜை பிடித்து சாப்பாடு ஜோராக

 அரங்கேறிய பின் சொகுசான சிற்றுந்தில் ஒலி  எழுப்பாத குலுங்காத 

பயணம்... பத்துமலை வாசம் செய்யும் முருகனை நோக்கி ...


                                                         பத்துமலை குகைகள் 




                                 சுண்ணாம்பு பாறைகளால் ஆன மலை,முகப்பில் கம்பீரமாக 

140 அடி உயரமுள்ள முருகன் சிலை ,செங்குத்தான படிகள் ஏறியதும் முருகன் 


சந்நிதி STALGAMITE,STALACTITE பாறைத் தூண்கள் ,அங்கங்கே சூரியனின் ஓளி 


கற்றைகள் எட்டி பார்க்கும் திறந்வெளிகள் என ரம்மியமாய் இருந்தது 


பத்துமலை குகைகள் .தை பூச திருவிழாவன்று 1.5 மில்லியன் பக்தர்கள் 


கூடுவார்கள்.வேறு எங்கும் இவ்வளவு மக்கள் கூடுவதில்லை என்று 


கூறினார்கள் .


WARMEMORIAL 

முதல் இரண்டாம் உலகப்போரிலும் ,சுதந்திர போராட்டத்திலும் உயிர் 

நீத்த படை வீரர்களின் நினைவாக உலகின் மிகப்  பெரிய வெண்கலச் 

சிலைகள்அமைக்க பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் .இந்த  இடத்தை 

சுற்றிலும் பறவைகள்,மான் , வண்ணத்துபூச்சி பூங்காக்கள் ,மலேசியா தேசிய 

மலரான செம்பருத்தி மற்றும் ஆர்கிட்  மலர் தோட்டங்கள் என இடமே 

அருமையாக இருந்தது.



GENTINGHIGH


லிம் கோ டோங் கூலி வேலை செய்ய சீனாவிலிருந்து வந்த சுரங்கத் 

தொழிலாளி .கடுமையான உழைப்பால் உயர்ந்து கனரக இயந்திரங்கள் 

தயாரிப்பிலும் தகர சுரங்கத் தொழிலும் முன்னேறி பெரும் வணிகராக 

உயர்ந்தவர் .அவருக்கு சொந்தமான கெண்டிங் மலை பிரதேசத்திற்குச் 

சென்றோம் .

 வழியில் STRAWBERRY  தோட்டம்.படங்களிலும் சிறிய பாக்கெட்டுகளிலும் 

மட்டுமே நாம் பார்த்திருக்கும் STRAWBERRY  பழங்கள் அழகாக காய்த்துத் 

தொங்குகின்றன .சிறு கூடையைக் கொடுத்து சின்னதாக நம்மை அறுவடை 

செய்யச் சொல்லி அதனை எடை போட்டு விற்கிறார்கள்.





அருகிலேயே லாவண்டர் தோட்டம் .அங்கு  உள்ள கடையில் 

அனைத்து பொருட்களும் கத்தரிப்பூ வண்ணத்தில் அமைத்து வைத்திருந்தது 

என்னை பெரிதும் கவர்ந்தது.






பின் மலை அடிவாரத்தில் மதிய உணவு அருந்திவிட்டு cable car மூலம் மலை 

உச்சி சென்றடைந்தோம்.






.பச்சை பசேல் என்று அடர்ந்த பசுமைமாறா மழைக்காடுகளை பறவை கண் 

கொண்டு ரசித்த படி கெண்டிங் ரேசொர்ட் வந்தடைந்தோம் ,கேளிக்கை 

விளையாட்டுகள் நிறைந்த பூங்கா கண்கவரும் வகையில் 

அமைக்கப்பட்டிருந்தது.







அரசாங்க அனுமதியுடன் இயங்கி வரும்  மிக பெரிய சூதாட்ட விடுதியில் 

சீனர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.6118 அறைகள் கொண்ட 

வேர்ல்ட் ஹோட்டல் அங்கு குறிப்பிடத்தக்கது.







இவற்றை கண்டு களித்த  பின் சாலை வழியாக மலை இறங்கினோம் .அதன் 

இடையே CHIN  SWEE  TEMPLE சென்றோம்.







பகோடா என்று சொல்லப்படும் கலைஅம்சதுடனான கோபுரமும் பெரிய புத்தர் 

சிலையும்,புத்த மத  கோட்பாடுகளை சித்தரிக்கும் சிலை வடிவங்களும் இதன் 

சிறப்பு.மறு நாள் கோலாலம்பூரின் மிகபெரிய அடையாள சின்னமான 

பெட்ரோனாஸ் கோபுரத்தைப் பார்க்க ஆயத்தமானோம்.

மலைக்க வைக்கும் மலேசியா 2

மலேசியா உள்ளே நுழையும் முன் அதன் வரலாற்று பக்கங்கள் சில ....

  1. தென்கிழக்கு ஆசியாவின் மலாய் தீபகற்பத்தில் உள்ள நாடு மலேசியா. 
  2. கி.மு 2500 முதல் 1500 ஆண்டுகளில் மக்கள் இங்கு குடிபெயர்ந்தனர் .
  3. இந்தியர்கள் மற்றும் சீனர்களுடன் கடல் வாணிகம் மேற்கொண்டதால் ஹிந்து சமயம்பரவியது.
  4. ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியம் தழைத்தது.தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் கடல் வழி வாணிகத்திற்கு இடையுறாக இருந்ததால் தமிழ் சோழ பேரரசன் ராஜேந்திர சோழன் படையெடுத்த பின்னர் இந்த சாம்ராஜ்யம்  சரியத் தொடங்கியது
  5. இந்தியா  முஸ்லிம் ஆதிக்கத்தின் கீழ் வந்த பின்னர் இஸ்லாம் இங்கும் பரவ தொடங்கியது.
  6. மன்னர் பரமேஸ்வரா இஸ்லாம் தழுவியதால் முஸ்லிம் நாடு ஆனது .
  7. 1511 இல் போர்த்துகீசிய ஆதிக்கம் பின்னர் வழக்கம் போல் இங்கிலாந்தின்  பிடியில்.
  8. ரப்பரும்  பனை மரங்களும் பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்டு  பெருமளவில் பயிர் செய்ய ஆரம்பித்த பொழுது ரப்பர் தோட்ட கடின வேலைகளுக்காக அடிமைகளாக  இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர் .
  9. 1941இல் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ்.
  10. 1944 இல் மீண்டும் இங்கிலாந்து வசம்.
  11. பின் ஒருங்கிணைந்த நாடாக 31 ஆகஸ்ட் 1957 சுதந்திரம் பெற்றது .
  12. முதல்பிரதம  மந்திரி டும்குல் அப்துல் ரஹான்.
  13. 1963 இல் சாரவாக் ,சபா ,சிங்கப்பூர்  இணைந்தன.
  14. 1965 இல் சிங்கப்பூர்  வெளியேறியது. 

Wednesday, January 29, 2014

மலைக்க வைக்கும் மலேசியா 1


                                                     எந்த ஒரு பயணம் சென்றாலும் அனுபவத்தையும் அதன் மூலம் அறிவும் ஊட்டிய தந்தைக்கும் பறக்க சிறகு தந்த மாமனாருக்கும் பல ஆண்டுகளுக்கு பிறகும் நினைவுபடுத்தி கொள்வதற்காக எனக்கும் ......இந்த பயண அனுபவங்கள் .....


                                                     பனை மரங்கள் நிறைந்த அழகிய மலேசியா,மலைகாடுகளை சீர்படுத்தி கட்டப்பட்ட வானுயர் கட்டிடங்களையும் படுத்து உருளும் அளவுக்கு சுத்தமாக இருக்கும் சாலைகளையும் உடைய சிங்கார சிங்கப்பூர் ....

                                                     இவற்றை விடவும் சிலிர்ப் பூட்டியது அந்நிய மண்ணில் முதல்முறையாக செலவு செய்த பத்து நாட்கள்.


                                                     லே முரியா travels உதவியுடன் பலரிடமும் கேட்டு தெரிந்து கொண்டபின் நாங்களே தயார் செய்து கொண்ட அட்டவணையுடன் 'மலேசியா ஏர்லைன்ஸ் ,பயணம்'.இந்திய நேரப்படி காலை 11.50 மணிக்கு இரண்டரை மணி நேரம் பயணம் செய்து கோலாலம்பூர் வந்தடைந்தது 6.30 மணிக்கு. பனைமரங்கள் தோப்புக்குள் தரை இறங்குவதை போல் எங்கும் பனை மரங்கள் .மிக பிரம்மாண்டமாய் கோலாலம்பூர் விமான நிலையம்,50 கிலோமீட்டர் ஒலி எழுப்பாத வேன் பயணம் ,அஞ்சப்பர் சாப்பாடு ,சுத்தமான தமிழகத்தில் இருந்தது போல் இருந்தது GRANDSEASONS  ஹோட்டல் வந்தடையும் முன்னர் மின்னொளியில்  வெள்ளியியாய் மின்னிய PETRONAS TOWER வெளியில் இருந்து கண்டுகளித்தோம் .