என்னமோ தெரில, அன்றைக்கு நாள் முழுக்க "நெஞ்சே எழு நெஞ்சே எழு "னு ஒலிச்சுகிட்டே இருந்திச்சு. இசை மழையில் நனைய அழகா ரெடி ஆகி பாண்டி கோவில் திடல் போயாச்சு .திடல் முழுக்க கருப்பு துணியால வேலி அமைச்சிருந்தாங்க.உள்ள போய் இடம் பிடித்து ஓய்யார மேடையில் ARR னு வெள்ளியில் தகதகக்கும் எழுத்துக்கள் பார்த்ததும் ஒரே சிலிர்ப்பு.sponsors விளம்பரமும் தடக் தடக்னு ரஹ்மான் பெருமை பேசும் கிளிப்பிங்குமாக மாறி மாறி போட எப்போ தலை வருவார்னு ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்தது.இருட்டிய 7:30 மணிக்கு மின்னொளியின் மாயாஜாலத்தினூடே அமர்க்களமான ஆரம்பம் .'அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டோய் 'னுஆரம்பிச்சு தீ தீ தீனு ஜ்வாலை நடுவே ரஹ்மானின் performer அவதாரம் ,அதுவரை இருக்கைகளில் அமைதியாக உட்கார்ந்திருந்தவர்களை சாமியாட வைத்தது.
நிகழ்ச்சி திட்டமிட்டது திட்டமிட்டபடி ஒவ்வொன்றாய் அரங்கேறியது.வரிசையாக வந்த நடன கலைஞர்கள் , ஓடி ஓடி வந்து கொஞ்சி கொஞ்சி பாடிய ஸ்வேதா மேனன் ,விஜய் பிரகாஷ், ஹரிஹரன் ,S .P B . என ஒவ்வொருவராக வெளியே வந்து இசைச்சரமாக இடைவிடாமல் பாடினார்கள்.நீல நிற ரம்மியமான பின்புலத்தில் வெள்ளை உடையில் தன்னந்தனியாக ஓடி வந்த கார்த்திக் சினாமிகாவை காதில் தேன் ஒழுகவிட்டு போனார்.மதுரகாரைங்களுக்கு அடிதடி பாட்டு தான் பிடிக்கும்னு எவன் சொன்னான்னு தெரில அப்றோம் வந்ததெல்லாம் தட் தட்ட்னு அவ்ளவும் காதைக் குடைந்துவிடும் ரகம்.திடீர்னு ஒரு surprise twist .தென்றல் வீசும் தோட்டத்தில் வெள்ளை பெஞ்சைப் போட்டு எஸ்.பி.பீ பேட்டி காணப்பட்டார் ரஹ்மானால்.காதல் வயப்பட்ட பெண்ணைப் பற்றி பாடுவோம் என ஆரம்பித்து "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ "என ஹரிச்சரண் ,கார்த்திக் ,எஸ்.பி. மாறி மாறி பாடினர் .மனதை கொள்ளை அடித்தது காந்தக் குரல் கார்த்திக் .
இத்தனை பேர் வந்திருந்தாலும் ஸ்ரேயா ,சின்மயி பாக்க முடியலையே என வருத்தப்பட்டது மனம் .பென்னி தயாள் இருந்தார் "ஓமணப்பெண்" இல்லை .ஹரிச்சரன் இருந்தார் "பூக்களே"இல்லை .ஹரிஹரன் இருந்தார் "உதயா "இல்லை.ரஹ்மான் இசையில் வந்த பாடல்களின் முதல் வரியை ஒன்றிணைத்து ராப் என்கிற பேரில் கத்தி விட்டு போனார்கள் "Blaze" குழுவினர்.மாமதுரை.....மதுரை ....என அழகு தமிழில் கொஞ்சிவிட்டு போனார் A .R .R .அப்பப்போ வீட்டுக்குப் போலாமான்னு பயமுறுத்திக்கிட்டே இருந்தார் ."தள்ளி போகாதே" ஒலிக்கவிட்டு sponsor பெயர் போட்டு நிகழ்ச்சி முடிந்துவிடுமோனு கவலை எட்டிப்பார்த்த போது second innings தொடங்கினார் .அடுத்த அரை மணி நேரம் கழித்து "ஜன கண மன " இசைத்த போது புரிந்து போயிற்று தல ஜூட் விடறார்னு .அடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு பாக்கலாமா னு ஒரு கேள்வியோட முடிச்சார் .We are waiting னுலாம் சொல்லமாட்டோம் நீங்க எங்க போறீங்களோ அங்க வறோம் னு உறுதிமொழி எடுத்தாச்சு .இது மாதிரி ஒரு show மதுரை மண் கண்டதில்லைனு தான் சொல்லணும் .தமிழ் மண் மதுரை மண் என்று கடைசி ஒரு பஞ்ச் வச்சு வந்திருந்த மதுரை மண்ணின் மைந்தர்கள் எங்கள் மனதில் அரியாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார் A .R .R .