மலேசியா உள்ளே நுழையும் முன் அதன் வரலாற்று பக்கங்கள் சில ....
- தென்கிழக்கு ஆசியாவின் மலாய் தீபகற்பத்தில் உள்ள நாடு மலேசியா.
- கி.மு 2500 முதல் 1500 ஆண்டுகளில் மக்கள் இங்கு குடிபெயர்ந்தனர் .
- இந்தியர்கள் மற்றும் சீனர்களுடன் கடல் வாணிகம் மேற்கொண்டதால் ஹிந்து சமயம்பரவியது.
- ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியம் தழைத்தது.தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் கடல் வழி வாணிகத்திற்கு இடையுறாக இருந்ததால் தமிழ் சோழ பேரரசன் ராஜேந்திர சோழன் படையெடுத்த பின்னர் இந்த சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியது
- இந்தியா முஸ்லிம் ஆதிக்கத்தின் கீழ் வந்த பின்னர் இஸ்லாம் இங்கும் பரவ தொடங்கியது.
- மன்னர் பரமேஸ்வரா இஸ்லாம் தழுவியதால் முஸ்லிம் நாடு ஆனது .
- 1511 இல் போர்த்துகீசிய ஆதிக்கம் பின்னர் வழக்கம் போல் இங்கிலாந்தின் பிடியில்.
- ரப்பரும் பனை மரங்களும் பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்டு பெருமளவில் பயிர் செய்ய ஆரம்பித்த பொழுது ரப்பர் தோட்ட கடின வேலைகளுக்காக அடிமைகளாக இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர் .
- 1941இல் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ்.
- 1944 இல் மீண்டும் இங்கிலாந்து வசம்.
- பின் ஒருங்கிணைந்த நாடாக 31 ஆகஸ்ட் 1957 சுதந்திரம் பெற்றது .
- முதல்பிரதம மந்திரி டும்குல் அப்துல் ரஹான்.
- 1963 இல் சாரவாக் ,சபா ,சிங்கப்பூர் இணைந்தன.
- 1965 இல் சிங்கப்பூர் வெளியேறியது.
No comments:
Post a Comment