அனைத்து ஹோட்டல்களிலும் காலை
உணவு சுயமாக பரி மாறி கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதால்
சிலபல தள்ளு முள்ளுகளுக்கிடையே மேஜை பிடித்து சாப்பாடு ஜோராக
அரங்கேறிய பின் சொகுசான சிற்றுந்தில் ஒலி எழுப்பாத குலுங்காத
பயணம்... பத்துமலை வாசம் செய்யும் முருகனை நோக்கி ...
பத்துமலை குகைகள்
சுண்ணாம்பு பாறைகளால் ஆன மலை,முகப்பில் கம்பீரமாக
140 அடி உயரமுள்ள முருகன் சிலை ,செங்குத்தான படிகள் ஏறியதும் முருகன்
சந்நிதி STALGAMITE,STALACTITE பாறைத் தூண்கள் ,அங்கங்கே சூரியனின் ஓளி
கற்றைகள் எட்டி பார்க்கும் திறந்வெளிகள் என ரம்மியமாய் இருந்தது
பத்துமலை குகைகள் .தை பூச திருவிழாவன்று 1.5 மில்லியன் பக்தர்கள்
கூடுவார்கள்.வேறு எங்கும் இவ்வளவு மக்கள் கூடுவதில்லை என்று
கூறினார்கள் .
140 அடி உயரமுள்ள முருகன் சிலை ,செங்குத்தான படிகள் ஏறியதும் முருகன்
சந்நிதி STALGAMITE,STALACTITE பாறைத் தூண்கள் ,அங்கங்கே சூரியனின் ஓளி
கற்றைகள் எட்டி பார்க்கும் திறந்வெளிகள் என ரம்மியமாய் இருந்தது
பத்துமலை குகைகள் .தை பூச திருவிழாவன்று 1.5 மில்லியன் பக்தர்கள்
கூடுவார்கள்.வேறு எங்கும் இவ்வளவு மக்கள் கூடுவதில்லை என்று
கூறினார்கள் .
WARMEMORIAL
முதல் இரண்டாம் உலகப்போரிலும் ,சுதந்திர போராட்டத்திலும் உயிர்
நீத்த படை வீரர்களின் நினைவாக உலகின் மிகப் பெரிய வெண்கலச்
சிலைகள்அமைக்க பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் .இந்த இடத்தை
சுற்றிலும் பறவைகள்,மான் , வண்ணத்துபூச்சி பூங்காக்கள் ,மலேசியா தேசிய
மலரான செம்பருத்தி மற்றும் ஆர்கிட் மலர் தோட்டங்கள் என இடமே
அருமையாக இருந்தது.
GENTINGHIGH
லிம் கோ டோங் கூலி வேலை செய்ய சீனாவிலிருந்து வந்த சுரங்கத்
தொழிலாளி .கடுமையான உழைப்பால் உயர்ந்து கனரக இயந்திரங்கள்
தயாரிப்பிலும் தகர சுரங்கத் தொழிலும் முன்னேறி பெரும் வணிகராக
உயர்ந்தவர் .அவருக்கு சொந்தமான கெண்டிங் மலை பிரதேசத்திற்குச்
சென்றோம் .
வழியில் STRAWBERRY தோட்டம்.படங்களிலும் சிறிய பாக்கெட்டுகளிலும்
மட்டுமே நாம் பார்த்திருக்கும் STRAWBERRY பழங்கள் அழகாக காய்த்துத்
தொங்குகின்றன .சிறு கூடையைக் கொடுத்து சின்னதாக நம்மை அறுவடை
செய்யச் சொல்லி அதனை எடை போட்டு விற்கிறார்கள்.
அருகிலேயே லாவண்டர் தோட்டம் .அங்கு உள்ள கடையில்
அனைத்து பொருட்களும் கத்தரிப்பூ வண்ணத்தில் அமைத்து வைத்திருந்தது
என்னை பெரிதும் கவர்ந்தது.
பின் மலை அடிவாரத்தில் மதிய உணவு அருந்திவிட்டு cable car மூலம் மலை
உச்சி சென்றடைந்தோம்.
.பச்சை பசேல் என்று அடர்ந்த பசுமைமாறா மழைக்காடுகளை பறவை கண்
கொண்டு ரசித்த படி கெண்டிங் ரேசொர்ட் வந்தடைந்தோம் ,கேளிக்கை
விளையாட்டுகள் நிறைந்த பூங்கா கண்கவரும் வகையில்
அமைக்கப்பட்டிருந்தது.
அரசாங்க அனுமதியுடன் இயங்கி வரும் மிக பெரிய சூதாட்ட விடுதியில்
சீனர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.6118 அறைகள் கொண்ட
வேர்ல்ட் ஹோட்டல் அங்கு குறிப்பிடத்தக்கது.
இவற்றை கண்டு களித்த பின் சாலை வழியாக மலை இறங்கினோம் .அதன்
இடையே CHIN SWEE TEMPLE சென்றோம்.
பகோடா என்று சொல்லப்படும் கலைஅம்சதுடனான கோபுரமும் பெரிய புத்தர்
சிலையும்,புத்த மத கோட்பாடுகளை சித்தரிக்கும் சிலை வடிவங்களும் இதன்
சிறப்பு.மறு நாள் கோலாலம்பூரின் மிகபெரிய அடையாள சின்னமான
பெட்ரோனாஸ் கோபுரத்தைப் பார்க்க ஆயத்தமானோம்.
No comments:
Post a Comment